search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை மரம்"

    • நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே உள்ள வலங்கைமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்.

    இவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்துவிட்டார்.

    இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பண்டித சோழநல்லூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 43) என்பவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பன்னீர் வீட்டுக்கு வந்தார்.

    தொழிலாளியான இவர் அப்பகுதியில் தென்னை மட்டைகள் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    எதிர்பாராதவிதமாக தென்னை குருத்து உடைந்தது.

    இதில் நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தனசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்
    • பெரியார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையி லும் அதை கண்டுகொள் ளாமல் பொதுமக்கள் பட் டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதி யில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப் போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதன்பேரில் நிலைய அதிகாரிகள் எஸ்.எஸ்.ஓ. பாலமுருகன், ஏ.டி.ஓ. சுரேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இத னால் உயிர்சேதம் ஏற்படு வது தவிர்க்கப்பட்டது.

    அதேபோன்று டி.வி.எஸ். நகர் பகுதியில் வெடித்த பட்டாசுகளால் அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் தீப்பிடித்தது. பெரி யார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆதறவற்றோர், முதியோர்களுக்கு

    தீபாவளியையொட்டி அன்பு உறவுகள் குழு சார்பில் திருநகரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம், பைக்கா ராவில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் காளவாசல், பெரியார் உள்ளிட்ட பல்வேறு சாலையோ ரத்தில் வசிப்பவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு களை நவீன் கண்ணன், தீபன் சக்ரவர்த்தி, சரவணன் உள்ளிட்ட அன்பு உறவுகள் குழு உறுப்பினர்கள் வழங்கினர்.

    • ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.
    • அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.

    பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது.
    • சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் இது ஆகஸ்ட் மாதமா?, அல்லது ஏப்ரல்,மே மாதமா? என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது. சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்,

    தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை கையில் ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு 500 தென்னங்கன்றுகளை வழங்கிய ராஜா எம்.எல்.ஏ. தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே தலைவன் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    500 தென்னங்கன்று

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூசைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தின ராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 500 தென்னங்கன்று களை பொது மக்களுக்கு வழங்கி, தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டி யனின் ஒன்றிய நிதியில் இருந்து ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே ரூ.20 லட்சம் மதிப் பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி களுக்கான பூமிபூஜை ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணி சாமி, வடமலாபுரம் அன்பு செல்வம்,

    நகரம் முருகானந்தம், நவநீத கிருஷ்ணன், பச்சேரி சக்தி, ஊராட்சிமன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், அனைத்து வார்டு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

    திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மின்சாரம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது
    • தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் ஆனைபாலம் அருகே லாரவிளை சாலையோரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து மின் வயர் மீது பட்டு சாலையில் விழுந்தது.

    இதனால் திடீரென தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அந்த வழியாக வந்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் முகமது சலீம் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
    • கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.

    தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-

    தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.

    இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.

    தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.

    இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு கடமக்கோடு மடத்துடத்துவிளையை சேர்ந்தவர் ராஜஜெயசிங் (வயது 36).

    இவருக்கு கிரிஸ்டல் பியூலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. இவர் தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அருகாமையில் ஒருவருக்கு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த தண்டப்பந் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 65), இளநீர் வியாபாரி. இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்து விட்டார்.

    கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரைமீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தகர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    • கருந்தலைப்புழு அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. பழங்கரையில் வேளாண்மை துறை மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

    அவிநாசி வேளாண்மை அலுவலர் சுஜி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு பேசுகையில், கருந்தலைப்புழு, அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3,4 ஓலைகளை தவிர மற்ற அனைத்து ஓலைகளும் காய்ந்து விடுகிறது. ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் உண்கின்றன. அதிகமாக நோய் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்தது போல் காட்சியளிக்கும் என்றார்.

    ×